மழைக்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி ராகவ் சத்தா நாடாளுமன்றத்திற்கு வெளியே தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென காகம் ஒன்று வந்து அவரைச் சுற்றி வட்டமிட்டு, அவரின் தலையில் கொத்துவதற்கு வந்தது. இதனால் அவர் குனிந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. ட்விட்டரில் வைரலாகும் இந்த புகைப்படத்தை வைத்து பொய் சொல்பவர்களின் தலையில் இப்படித்தான் காகம் கொட்டும் என பாஜகவினர் கிண்டலடித்து வருகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி பிரிவு இந்த புகைப்படத்தை ட்விட் செய்து, ஒருவர் பொய் பேசக் கூடாது, இல்லையெனில் காகம் உங்களைத் தாக்கும் என்று ராகவ் சதாவை கிண்டலடித்துள்ளது. மேலும் இன்னும் சில பாஜக தலைவர்களும் இப்படத்தை வைரலாக்கியுள்ளனர்.