மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைக் கழகத்தின் சார்பாக இதுவரை கலைஞர் அறிவாலய அறக்கட்டையில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட…  கழகத்துடைய மூத்த முன்னோடிகளுக்கு மருத்துவ செலவு –  அவர்களுடைய குடும்பத்தில் படிக்க கூடிய மாணவ – மாணவிகள்  கல்வி செலவு அப்படின்னு… கலைஞர் அறக்கட்டையின் மூலமாக 8 பேருக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில்,  இதுவரை 5 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இளைஞரணி சார்பாக நானும் கடந்த  நான்கைந்து மாதமாக  அறக்கட்டளைக்கு வரும் என்ற விண்ணப்பங்கள்,  மனுக்களை எல்லாம் பரிசீலித்து  யார் யாருக்கு கண்டிப்பாக உதவி தேவையோ ? மருத்துவ உதவி, கல்வி உதவி என  நாங்களும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களில் ஒரு 50 லட்சம் ரூபாய் வரைக்கும் உதவி செய்திருக்கிறோம். அதேபோல் என்னுடைய தொடர்ச்சியின் சுற்றுப்பயணம்..

கடந்த ஒன்னே முக்கால் வருடத்தில் மட்டும்…  சென்னை – கரூர் – கோவை – நாமக்கல் – சேலம் –  தஞ்சாவூர் – திருவாரூர் – அரியலூர் – நாகப்பட்டினம் – மயிலாடுதுறை –  திருப்பத்தூர் – திருவண்ணாமலை இப்போ இரண்டு நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி – திருப்பத்தூர் இங்க எல்லாம் போயிட்டு வந்திருக்கிறேன்.

கிட்டத்தட்ட 30 மாவட்டங்களில் இதுவரை என்னுடைய கைகளால் மட்டும்  மாவட்ட கழகத்தின் சார்பாக 30 கோடி ரூபாய் கழகத்தினுடைய மூத்த முன்னோடிகளுக்கு நாம் வழங்கி இருக்கின்றோம். இதை நான் ஏன் இப்ப சொல்றேன்னா…  இது ஏதோ பெருமைக்காக நடத்துற விஷயம் கிடையாது. இது பல மேடைகளில் நான் சொல்லிட்டு இருக்கிறேன்.

ஒரு பேரன் தன்னுடைய தாத்தாக்களுக்கும் – பாட்டிகளுக்கும் செய்கின்ற ஒரு கடமையாகத்தான் நான் இதை பார்த்திருக்கின்றேன். நான் பலமுறை கழக மூத்த முன்னோடிகளை  சந்திக்கும்போது  சொல்ற ஒரே விஷயம்…  இந்த மாதிரி பல நிகழ்ச்சிகளில்  கலந்து கொள்ளும்போது… கழகத்துடைய மூத்த முன்னோடிகள் எல்லாம் பார்க்கும்போது எனக்கு பெருமையாகவும் இருக்கும். அதே நேரத்தில் பொறாமையாகவும் இருக்கும்.

பெருமை என்ன என்றால் ? இந்த கழகத்தினுடைய வரலாறாக  உக்காந்திருக்கீங்க…  வரலாற்றுக்கு ஒரு எடுத்துக்காட்டா உட்கார்ந்து இருக்கீங்க…. ஆனால் பொறாமை என்னவென்றால் ? நீங்கள் எல்லாம் தந்தை பெரியாரை நேரில் பார்த்திருப்பீங்க….பேரறிஞ்சர் அண்ணாவை நேரில் பார்த்திருப்பீங்க….  தந்தை பெரியாரோடு பொதுக்கூட்டத்திற்கு  போய் இருப்பிங்க… பேரறிஞர் அண்ணா உடைய பொதுக்கூட்டத்துக்கு போய் இருப்பீங்க. அவங்களோட போராட்டத்தில் கலந்து இருப்பீங்க….  சிறை சென்றிருப்பீங்க…  நீங்க எல்லாம் அவர்களை நேர்ல பாத்து இருப்பீங்க.

நான் கலைஞரை மட்டும்தான் நேரில் பார்த்திருக்கிறேன்.. இனமான    பேராசிரியர் தாத்தாவை  நேர்ல பார்த்திருப்பேன். அதனால தான் உங்கள எல்லாம் பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கும். ஆனால்  நான் உங்களை எல்லாம்…  தந்தை பெரியாருடைய மறு உருவமாக….   இனமான பேராசிரியர் தாத்தாவின் மறு உருவமாக….  பேரறிஞர் அண்ணாவின் மறு உருவமாக….  நம்முடைய முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் மறு உருவமாக உங்களை எல்லாம் பார்த்து இருக்கேன் என தெரிவித்தார்.