உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், பராமரிப்புத் தொகை வழங்குவதைத் தவிர்க்க தனது கணவர் உடல்நலக்குறைவு போல் நாடகமாடுவதாக மனைவி குற்றம் சாட்டியதை அடுத்து, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றத்திற்கு ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மூளை ரத்தக்கசிவு காரணமாகப் பேச்சுத்திறன் மற்றும் நடக்கும் திறனை இழந்த அந்த நபர், முழுமையாகத் தனது குடும்பத்தினரின் பராமரிப்பிலேயே இருந்து வருகிறார்.
மேலும் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரே மாதத்தில் முறிந்த நிலையில், மனைவி நீதிமன்றத்தை நாடிப் பராமரிப்புத் தொகை கோரியிருந்தார். தனது கணவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், பணத்தைத் தராமல் இருக்கவே நோய்வாய்ப்பட்டது போல நடிக்கிறார் என்றும் அவர் நீதிமன்றத்தில் வாதிட்டது குறிப்பிடத்தக்கது. மனைவியின் இந்தப் பொய்க் குற்றச்சாட்டை முறியடிக்கவும், கணவரின் உண்மையான உடல்நிலையை நீதிபதிக்கு உணர்த்தவும் அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
In a shocking case in Kanpur, a paralyzed husband was brought to court on a stretcher to prove his physical condition in a maintenance dispute. The wife claimed that the husband was faking illness, even though he had been paralyzed due to brain hemorrhage.
The woman told the… pic.twitter.com/zC8TbuqMqi
— ForMenIndia (@ForMenIndia_) December 20, 2025
“>”நடிக்காதே… கோர்ட்டுக்கு வா
இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் அவர் ஸ்ட்ரெச்சரில் கிடத்தப்பட்டிருந்த காட்சி காண்போரை நிலைகுலையச் செய்தது. இது தொடர்பாக மருத்துவ ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை அவரது வழக்கறிஞர் சமர்ப்பித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், ஒருமுறை கூட அவரது மனைவி நலம் விசாரிக்க வரவில்லை என்றும் அவரது சகோதரி வேதனையுடன் தெரிவித்தார். இந்தச் சூழலை ஆய்வு செய்த நீதிமன்றம், அந்த நபருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டு வழக்கைத் தள்ளிவைத்துள்ளது.
