நேரலை தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் ஒரு விவாதக் குழு உறுப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமர் உஜாலா தொலைக்காட்சி நடத்திய இந்த விவாதத்தின் போது, ராம்தேவ் திடீரென தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் மல்யுத்த வீரரைப் போல சக குழு உறுப்பினர் மீது பாய்ந்து அவரைத் தாக்க முயன்றார்.

ஆனால் எதிர்பாராத விதமாக, அந்த நபர் ராம்தேவை தடுத்து நிறுத்தி, அவரைத் தூக்கி தரையில் வீசியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருவரும் மேடையில் மல்யுத்தம் செய்வது போல கட்டி உருண்டு சண்டையிட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“>

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திற்குப் பிறகு விளக்கம் அளித்த பாபா ராம்தேவ், இது தற்செயலாக நடந்த ஒன்றென்றும், ஒரு விளையாட்டுத் தனமான வேடிக்கைக்காகவே இவ்வாறு செய்ததாகவும், இதை யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

இருப்பினும், ஒரு தேசிய தொலைக்காட்சியின் நேரலை விவாதத்தை மல்யுத்த களமாக மாற்றிய ராம்தேவின் செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் அவரை “ஸ்கேம்தேவ்” என்று கிண்டல் செய்தும், விளம்பரத்திற்காகவே இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபடுவதாகவும் பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.