இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் கடன் மூலமாக பல்வேறு தற்கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் வசித்து வந்தவர்கள் பூபேந்திர விஸ்வகர்மா. இவருடைய மனைவி ரித்து. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவி இருவரும் கடன் தொல்லை காரணமாக தங்களுடைய குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். சம்பவ இடத்திலிருந்து தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கடன் செலுத்தாவிட்டால் உங்களுடைய ஆபாச படங்களை வெளியிடுவோம் என்று கடன் வழங்கிய நிறுவனங்கள் கூறியதாகவும் இதனால் மன உளைச்சலில் இந்த முடிவு எடுத்ததாகவும் அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் குடும்பத்தின் தேவையை சமாளிப்பதற்காக ஆன்லைனில் லோன் எடுத்தேன். அப்பொழுது மோசடிக்கு ஆளானேன். அவர்களால் நான் ஏமாற்றப்பட்டேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்னை மிரட்ட ஆரம்பித்தார்கள். என்னுடைய தொலைபேசி ஹேக் செய்து குடும்பத்தினரை செய்ய மிரட்ட தொடங்கினார்கள். என் குடும்பத்தினரின் படத்தையும் தவறாக பயன்படுத்தினார்கள். என்னுடைய தவறினால் ஒட்டுமொத்த குடும்பமே பாதிக்கப்படும். அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று எழுதப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.