லியோ திரைப்படம் கடந்த 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இந்த படத்துக்கான வெற்றி விழா வருகின்ற நவம்பர் 1ம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில், அதற்கு காவல்துறை தரப்பில் நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், வெற்றி விழாவுக்கான ஏற்பாடுகள் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழாக்கான டிக்கெட்கள், ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்ய படக்குழு முடிவு எடுத்துள்ளது.

ரசிகர்களுக்கு அதிகப்படியான பாஸ்கள் கொடுக்க முடியாத காரணத்தால் லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்வதாக, முன்பு தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்திருந்தார். தற்போது வெற்றி விழாவுக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யும் முடிவால், ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்