பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ‘வீட்ல விஷேசங்க’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பிரகதி. தனது 20வது வயதில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில், 47 வயதாகும் இவர் தெலுங்கு தயாரிப்பாளரை 2வது திருமணம் செய்ய உள்ளதாக தெலுங்கு ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த பிரகதி, அந்த ஊடகத்தை கடுமையாக தாக்கியும் பேசியுள்ளார்.