ஒரு பெண் தனது தோளில் மிகப்பெரிய மலைப்பாம்பை தூக்கிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் தைரியம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், ஒரு பெண் பெரிய மலைப்பாம்பை எந்தப் பயமுமின்றி தனது தோளில் சுமந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. பொதுவாக சிறிய பாம்புகளையே கண்டு மக்கள் அஞ்சுவார்கள். ஆனால் இவ்வளவு பெரிய பாம்பை பயமின்றி தூக்கும் அந்தப் பெண்ணின் தைரியம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
மலைப்பாம்பு சில நொடிகள் அந்தப் பெண்ணின் காலில் சுற்றிக் கொண்டிருந்தது. இருந்தாலும் அவள் அதைக் கண்டு சற்றும் திகைக்காமல் அமைதியாக இருந்தார். பின்னர் பாம்பு மிகவும் கனமாக இருந்ததால், அவள் அதை மெதுவாக தரையில் வைத்தார்.
மேலும் இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் தளத்தில் @thereptilezoo என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து வருவதுடன், ஆயிரக்கணக்கானோர் அந்தப் பெண்ணின் தைரியத்தை பாராட்டி வருகிறார்கள். சிலர் கருத்து பதிவுகளில், “அவள் மனிதனா அல்லது பாம்புப் பெண்ணா?”, இவ்வளவு பெரிய பாம்பை சிங்கங்கள் கூட தூக்க மாட்டார்கள்; ஆனால் இந்தப் பெண் மிகத் தைரியமானவள்,” எனப் பாராட்டி வருகின்றனர்.
