உலகின் மிக ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படும் கொமோடோ டிராகன், ஒரு குரங்கை உயிருடன் விழுங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளமான X  தளத்தில் @TheeDarkCircle என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த 19 வினாடி காணொளி 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. அதில், ஒரு பெரிய கொமோடோ டிராகன் ஒரு குரங்கைப் பிடித்து, சில நொடிகளில் அதனை முழுமையாக விழுங்குவதைப் போலத் தோன்றுகிறது.

அந்த வீடியோவில் கொமோடோ டிராகன்கள் தங்கள் உடல் எடையின் 80 சதவீதம் வரை ஒரே உணவை சாப்பிட்டுவிட்டு, பின்னர் பல வாரங்கள் உணவின்றி உயிர்வாழக்கூடியவை” என்ற விளக்கம் இடப்பட்டுள்ளது.

காணொளியில் குரங்கு அசையாமல் கிடப்பது, அது ஏற்கனவே கொமோடோ டிராகனால் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதைப் பரிதாபமாக உணர்த்துகிறது. சில விநாடிகளில் அதை முழுமையாக விழுங்கும் காட்சி இணையவாசிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

 

இயற்கையில், கொமோடோ டிராகன்கள் இந்தோனேசிய தீவுகளின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. இவை சுமார் 3 மீட்டர் நீளமும் 70 முதல் 90 கிலோ எடையுமுடையவை. தங்கள் கூர்மையான பற்கள் மற்றும் நச்சு கலந்த உமிழ்நீரால் எந்த விலங்கையும் கொல்லக்கூடிய திறன் கொண்டவை.

இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். சிலர், “இது இயற்கையின் கொடூரமான பக்கம்” என்று கூறியிருந்தனர்; மற்றவர்கள், “குரங்கின் நிலை பார்த்தால் மனம் கலங்குகிறது” எனக் குறிப்பிட்டனர்.

மேலும் சிலர் நகைச்சுவையாக, “இது குரங்கின் கடைசி உணவு நேரம்” என்றும், “கொமோடோவுக்கு இதுவே பண்டிகை விருந்து போலிருக்கிறது” என்றும் பதிவிட்டுள்ளனர். இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ, இயற்கையின் கடுமையான உண்மை மற்றும் விலங்குகளின் வாழ்வியல் போராட்டத்தை நினைவூட்டுகிறது.