சமூக வலைதளங்களில் எப்போதுமே வித்தியாசமான வீடியோக்களுக்குப் பஞ்சமிருக்காது. அந்த வகையில், தற்போது உடல் முழுவதும் புறாக்களால் சூழப்பட்டபடி ஒருவர் சாதாரணமாகச் சாலையில் நடந்து வரும் வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. கழுத்தில் இருந்து இடுப்பு வரை டஜன் கணக்கான புறாக்கள் அவர் மீது அமர்ந்திருக்க, அவர் எவ்வித பதற்றமும் இன்றி நடந்து வருவதைப் பார்த்து மக்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர். அவரைச் சுற்றி வருபவர்கள் செல்பி எடுத்தும், வீடியோ எடுத்தும் இந்த விந்தையான காட்சியைப் பதிவு செய்து வருகின்றனர். அவரைப் பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் ‘பர்ட் மேன்’ (Bird Man) என்று செல்லமாக அழைத்து வருகின்றனர்.
இந்த வீடியோவில் அந்த நபர் மிகவும் அமைதியாக, “இவை அனைத்தும் எனது நண்பர்கள், நான் எங்கு சென்றாலும் இவை என்னுடன் வரும்” என்று கூறுகிறார். பறவைகளுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள இந்த அழகான பிணைப்பு பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இருப்பினும், தொழில்நுட்ப ரீதியாகப் பார்க்கும்போது இது ஒரு ஏ ஐ (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது. நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் இவ்வளவு தத்ரூபமாக ஒரு காட்சியினை உருவாக்கி சமூக வலைதளங்களில் உலாவ விட்டுள்ளனர்.
