நிறங்களின் திருவிழாவான ஹோலியைத் தங்கள் குடும்பத்துடன் கொண்டாட அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் வேளையில், இன்ஸ்டாகிராம் பயனர் தினேஷ் ரத்தோர் பகிர்ந்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஓமெகிள் தளத்தில் தற்செயலாக ஒரு இளைஞருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த இளைஞர் திடீரெனத் தனது குடும்பத்தினர் தன்னை ஹோலிக்கு வீட்டிற்கு வர வேண்டாம் எனத் தடுத்துவிட்டதாகக் கூறி விம்மி விம்மி அழத் தொடங்கினார்.
“நான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறேன் அண்ணா.. ஆனாலும் என் குடும்பத்தினர் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை; சொல்லாமல் வீட்டிற்குப் போவதும் சரியாக இருக்காது” என்று அவர் தேம்பி அழுதது பார்ப்பவர்களின் நெஞ்சைக் கனக்கச் செய்துள்ளது.
View this post on Instagram
“>
“ஆண்கள் அழுவதில்லை என்று யார் சொன்னது? குடும்பத்திற்காகத் தங்களையே வருத்திக் கொள்ளும் இவர்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு” என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
