ஐதராபாத்தில் வசித்து வந்த ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 21 வயது மாணவியும், பகுதிநேர யூடியூபருமான போனு கோமாலி, தனது வாடகை வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, குவைத்தில் பணிபுரியும் தனது தாய்க்கு “ஐ லவ் யூ சோ மச்” (I Love You So Much) என்று உருக்கமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

​ராய்துர்க்கம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோமாலி கடந்த மூன்று ஆண்டுகளாக நிகில் ரெட்டி என்பவரைக் காதலித்து வந்ததும், சமீபத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றதும் தெரியவந்துள்ளது. இந்த காதல் தோல்வியால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த கோமாலி, ஆறு மாதங்களுக்கு முன்பே தற்கொலைக்கு முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கிருந்த ஏணி மற்றும் சேலையைக் கைப்பற்றியுள்ளனர்.

தற்போது அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காதலர் நிகில் ரெட்டியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த மரணம் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.