சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று யாராலும் கணிக்க முடியாது. அந்த வகையில், தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ள ஒரு ஆடு, சாதாரண விலங்குகளைப் போல அல்லாமல் ஒரு ‘இளவரசனைப்’ போல சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சொகுசு வாழ்க்கை பொதுவாக ஆடுகள் புல்வெளிகளிலும், தெருக்களிலும் சுற்றித் திரிவதையே நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்த ஆடு எந்தவிதப் புல்-பூண்டுகளுக்கும் அடிமையாகாமல், மென்மையான மெத்தை மற்றும் போர்வையில் படுத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதன் இந்த ‘லக்சரி’ வாழ்க்கை முறையைப் பார்த்து நெட்டிசன்கள் ஒருபுறம் வியந்தாலும், மறுபுறம் சிரிப்பலையில் மூழ்கியுள்ளனர்.
மொபைலுக்கு அடிமையான ஆடு இந்த ஆட்டின் மற்றொரு வினோதமான பழக்கம் என்னவென்றால், இது ஒரு சிறு குழந்தையைப் போல மொபைல் திரையை உற்றுப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. வைரலாகி வரும் வீடியோவில், மொபைலில் ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கான பாடல்களை (Rhymes) அந்த ஆடு மிகவும் கவனமாகப் பார்ப்பதைக் காணலாம். அதைப் பார்க்கும்போது, உண்மையிலேயே அந்தப் பாடல்களை ரசித்துப் புரிந்துகொள்ள முயற்சிப்பது போலவே இருக்கிறது.
View this post on Instagram
குவியும் கருத்துகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்துள்ளனர். “இந்த ஆடு எங்களை விட நவீனமாக இருக்கிறதே!” என்றும், “விலங்குகளுக்கும் இன்டர்நெட் போதை தொற்றிக்கொண்டது” என்றும் வேடிக்கையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். கழுத்தைச் சற்றே சரித்து அந்த ஆடு மொபைலைப் பார்க்கும் விதம் அனைவரையும் சிரிக்க வைக்கிறது.
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், இதுபோன்ற சிறு சிறு காணொளிகள் மக்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாக அமைகின்றன. ஒரு மென்மையான போர்வையும், மொபைல் திரையும் இருந்தால் அதுவே சொர்க்கம் என்பதை இந்த ஆடு நிரூபித்துள்ண்ணளது.
