விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் இதில் மக்களுக்கு பரிச்சயமான போட்டியாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தற்போது 91 நாட்களைக் கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்க முடியாமல் நிகழ்ச்சியை சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரவீனா மற்றும் நிக்சன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுள்ள நிலையில் அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.