வெங்கட் பிரபு இயக்கும் நடிகர் விஜயின் 68-வது படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆங்கில புத்தாண்டை ஒட்டி விஜயின் 68வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கும் நடிகர் விஜயின் 68 வது திரைப்படத்தின் 2வது லுக் போஸ்டரை  6 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது..  விஜய்யின் 68வது திரைப்படத்தின் அப்டேட்  புத்தாண்டு கொண்டத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்டாக  அடுத்தடுத்து வெளியாகி உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கு விஜயின் 68வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. #GOAT என பெயரிடப்பட்டுள்ள விஜயின் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ், அரவிந்த்,  சினேகா, லைலா, ரம்யா கிருஷ்ணன், இவானா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.