திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ள பேச்சு, தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தவெக அரசு அமைந்த பிறகு நடைபெறும் இந்த முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்களிடம் உற்சாகத்தை ஊட்டிய ஸ்டாலின், “தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம், எனவே தேர்தலைச் சந்திக்க இப்போதே தயாராக இருங்கள்” என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தவெக அரசுக்கு ஆதரவளித்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிலவி வரும் குதிரை பேரப் புகார்களை மனதில் வைத்தே ஸ்டாலின் இவ்வாறு பேசியதாகக் கருதப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் வர இன்னும் காலம் இருந்தாலும், தற்போதைய ஆட்சி மாற்றத்திற்குப் பிந்தைய குழப்பங்களைச் சாதகமாக்கி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க திமுக இப்போதே வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டது என்பதை ஸ்டாலினின் இந்த ‘வார்னிங்’ பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
“ஆட்சி எப்போ வேணா கவிழும்.. ரெடியா இருங்க..”
தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!#DMK | #MKStalin | #Election2026 | #TVK | #PolimerNews pic.twitter.com/QO53jOBiBf
— Polimer News (@polimernews) May 14, 2026
“>
