அ.தி.மு.க. பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான சி.வி. சண்முகம், “தேர்தலுக்கு பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் இலவசமாக வழங்குவார்கள்” என்று கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த பேச்சு, பெண்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு அரசியல் வட்டாரங்களும் சமூக அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் திமுக அமைச்சர் கீதா ஜீவனம் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் கூறியதாவது, “அ.தி.மு.க.வின் பெண்கள் மீதான வக்கிரமும் வன்மமுமான அணுகுமுறையும் சி.வி. சண்முகத்தின் பேச்சில் வெளிப்பட்டுள்ளது. ஓர் அரசியல்வாதியாக அல்லாமல், மனிதராக இருப்பதற்கே தகுதியற்றவர் சி.வி. சண்முகம். ஜெயலலிதா இருந்த காலத்தில் அவர் இப்படிப் பேச முடியாது. அவ்வாறு பேசியிருந்தால், அவரை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா,” என்று கூறப்பட்டுள்ளது.

அதன் பிறகு “திராவிட மாடல் ஆட்சியில் பெண்களின் பொருளாதார தன்னிறைவு மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது; கல்வியிலும் அவர்களின் பங்குபெறுதல் அதிகரித்துள்ளது.

மேலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழந்த வரலாறுகள் ஏராளம். பெண்களை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படும் அ.தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வரும் 2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களிடமிருந்து தக்கப் பதிலைப் பெறுவார்கள்,” எ்று கூறியுள்ளார்.