தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டு எழுதியவர்களின் உத்தேச விடை குறிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் கணினி வழியில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடை குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேவர்கள் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடை குறிப்புக்கு இணையதளத்தில் ஆட்சேபனை தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் அதற்குரிய சான்றிதழ்களை இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக உத்தேச விடை குறிப்பின் மீது தேர்தல்கள் ஆற்றிய பணி தெரிவிக்க விரும்பினால் பிப்ரவரி 22 முதல் 25ஆம் தேதி மாலை 5.30 மணி வரை ஆதாரங்களுடன் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.