போராட்டம் நடத்தி வரும் 3 ஆசிரியர் சங்கங்களையும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்..

சம வேலைக்கு சம ஊழியம் கோரி இடைநிலை ஆசிரியர்களும், பணி நிரந்தரம் கோரி பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களும் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 28ஆம் தேதி முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 2013ஆம் ஆண்டு நடத்தப்பட்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் பணி கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் அவரது இல்லத்தில் 3 ஆசிரியர் சங்கங்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் போராட்டம் மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் போராட்டம் நடத்தி வரும் 3 ஆசிரியர் சங்கங்களையும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அமைச்சருடன் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், பள்ளி கல்வித்துறை இயக்குனர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.