செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  தம்பி விஜய் அவர்கள் நடித்த லியோ படத்து பாட்டு வெளியிடுக்கு நேரு அரங்கத்துல அவர் போய் அனுமதி கேட்டு இருக்காரு. இதுவரைக்கும் பல படங்கள் பாட்டை வெளியிட்டார். எத்தனையோ பண்ணியிருக்கார்.  எதுக்கு இந்த முறை அவர் படத்து பாட்டு வெளியிட்டுக்கு அனுமதி கொடுக்கலை?  நடக்க வேண்டியதை ஏன் ரத்து பண்ணுறீங்க ?

கேட்டா  அன்பு சகோதரர் A.R ரகுமான் இசை நிகழ்ச்சில நடந்த பிரச்சனைக்கும்,  ரகுமானுக்கு எதாவது சம்மந்தம் இருக்கா ? நீங்க  மனசான்று உள்ள ஊடக வியலாளர்கள் சொல்லுங்க… ஒரு நிகழ்வு நடத்தும் போது அரசுகிட்ட அனுமதி கேக்குறோம். அனுமதி கொடுத்தது யாரு? காவல்துறை தான… காவல்துறை முன் ஆய்வு செய்யணும். முன் ஆய்வு செய்து எங்களை என்ன செய்யிறீங்க?

அந்த இடம் பிரச்சனையா இருக்கும். நெரிசல் வரும். போக்குவரத்து இந்த இடத்துல போகும். இந்த இதுல போட்டுக்கோங்க…  குறிப்பிட்ட நேரம் வரைக்கும் வாகனங்களை வேற பக்கம் திருப்பி விடுறேன் என சொல்லுறீங்க.. இது சரியான அணுகு முறை.

A.R ரகுமான் அவர்கள் அனுமதி கேட்ட உடனே களத்தை ஆய்வு செய்து…  ஐயா இவ்ளோ வாகனம் தான் நிறுத்த முடியும். இது பிரச்சனை. அதனால நீங்க வேற இடத்தை தேர்வு செய்ங்க சொல்லிருக்கணும். இல்லைன்னா…  அதுக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து,  ஒழுங்கு பண்ணி நடத்திற்கனும். அதுக்கு தான் அரசு.

நடத்தவே நடத்தாத… எங்களால பாதுகாப்பே  கொடுக்க முடியாது என  சொல்லுறதுக்கு எதுக்கு அரசு ? எதுக்கு காவல்துறை ? நீ வீட்டைவிட்டு வெளில வந்தா…  செத்து போயிருவ…  கதவை பூட்டிட்டு உள்ளேயே படுன்னு சொல்லுறதுக்கு போலீஸ் தேவை இல்லையே என ஆவேசமானார்