அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகை வித்யா, நல்ல ஜாதில ஒரு பொண்ணு ஜோரத்துல இறந்தா கூட ஸ்டாலின் விழுந்து அடிச்சுகிட்டு போவாரு. ஆனால் தாழ்த்தப்பட்ட இனத்துல ஒரு கொலையே விழுந்தாலும்  திரும்பி கூட பாக்க மாட்டாரு… கூலா துபாய் ட்ரிப்புக்கு போய்டுவாரு. தாழ்த்தப்பட்டவங்களுக்கு நீதிபதி பதவி நாங்க போட்ட பிச்சை என ஆர்.எஸ் பாரதி பேசுனாரு…. பெண்களை பார்த்து  ஓ.சி சீட்டு என கிண்டல் பண்ணாரு அமைச்சர் பொன்முடி.

திமுக மாவட்ட செயலாளர் ஒரு தலித் பையன் கோவிலகுள்ள வந்தான்னு அடிச்சி,  அடிச்சி வெரட்டி வெளில தள்ளுனாரு. இவங்க மேலெல்லாம் அக்ஷன் எடுத்து இருந்தா ? அது சமூக நீதி. வேங்கைவயலில் குடி தொட்டியில மலம் கலந்தவங்க யாருன்னு இன்னும் கண்டுபுடிக்கமுடில… இதுவரை நடவடிக்கை எடுப்போம்னு  சொல்லுறாங்க… எடுத்து இருந்தா ? கண்டு புடிச்சிருந்தா ? அது சமூக நீதி..

ஆதி திராவிடர் பசங்க எல்லாம் படிக்கிற ஹாஸ்டல்க்கும் ,ஸ்கூல்க்கும் போய்ப்பாருங்க. அங்க படுக்க பாய் – தலைகாணி எல்லாம் கிடையாது. லைட் கிடையாது, பேன் கிடையாது. ஒதுங்க டாய்லெட் கிடையாது,  குளிக்க பாத்ரூம் கிடையாது, சாப்பிடுற சாப்பாடு கூட ஒழுங்கான சாப்பாடு கிடையாது. ஆனால்  உதயநிதி நடத்துறது ஸ்கூலும்…  திமுக அமைச்சர்கள் நடத்துற காலேஜீம், ஹாஸ்டலும் போய் பாருங்க. அங்க  ACஇல் இருந்து  AIR பஸ் வரைக்கும் எல்லா வசதியும் இருக்கும். ஏன்னா அவங்க கிட்ட இருக்கு காசு, பணம், துட்டு, ,Money ,Money இவங்க எல்லாம் சமூக நீதி பத்தி பேசிகிட்டு இருகாங்க என கடுமையாக விமர்சனம் செய்தார்.