ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கல பதக்கம் வென்றது. வில்வித்தை போட்டியில் அங்கிதா பகத், பஜன் கவுர், சிம்ரன்ஜீத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. அங்கிதா, பஜன் கவுர் மற்றும் சிம்ரன்ஜீத் கவுர் மூவரும் 6-2 என்ற கோல் கணக்கில் வியட்நாமை வீழ்த்தினர். ஆசிய விளையாட்டு போட்டியில் 21 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கல பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.