இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமனில் முடித்த இந்திய கிரிக்கெட் அணி, தற்போது பரபரப்பான போட்டி அட்டவணையுடன் மீண்டும் கிரிக்கெட் மேடைக்கு களமிறங்க உள்ளது.

டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 போட்டிகள் என, இந்திய அணி 2025 வரை தொடர்களில் தொடர்ந்து பங்கேற்கவுள்ளது. இதில் முக்கியமாக ஆசியக் கோப்பை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடன் பல்வேறு தொடர்களும், சுற்றுப்பயணங்களும் இடம்பெறவுள்ளன.

ஆசியக் கோப்பை 2025 – UAE
மூத்த வீரர்கள் ஓய்வுக்கு பிறகு, இளம் அணியுடன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்தியா களமிறங்கும் இந்த போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளன.

செப் 10 – இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம் (துபாய்)

செப் 14 – இந்தியா vs பாகிஸ்தான் (துபாய்)

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் – இந்தியாவில்
இந்த தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றின் தொடக்கமாகும்.

அக் 02 – 1வது டெஸ்ட் (அகமதாபாத்)

அக் 10 – 2வது டெஸ்ட் (டெல்லி)

🇦🇺 ஆஸ்திரேலியாவில் லிமிடெட் ஓவர்ஸ் தொடர்
இந்திய அணி, அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்யவுள்ளது. இதில் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் நடைபெறும்.

ஒருநாள் போட்டிகள்:

அக் 19 – 1வது ஒருநாள் (பெர்த்)

அக் 23 – 2வது ஒருநாள் (அடிலெய்ட்)

அக் 25 – 3வது ஒருநாள் (சிட்னி)

டி20 போட்டிகள்:

அக் 29 – 1வது T20 (கான்பெர்ரா)

அக் 31 – 2வது T20 (மெல்போர்ன்)

நவ 02 – 3வது T20 (ஹோபார்ட்)

நவ 06 – 4வது T20 (கோல்ட் கோஸ்ட்)

நவ 08 – 5வது T20 (பிரிஸ்பேன்)

🇿🇦 தென்னாப்பிரிக்கா தொடருடன் 2025 நிறைவு
இந்தியாவில் நடைபெறும் இந்த தொடர் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் அடங்கியதாகும்.

டெஸ்ட்:

நவ 14 – 1வது டெஸ்ட் (கொல்கத்தா)

நவ 22 – 2வது டெஸ்ட் (கவுகாத்தி)

ஒருநாள்:

நவ 30 – 1வது ஒருநாள் (ராஞ்சி)

டிச 03 – 2வது ஒருநாள் (ராய்பூர்)

டிச 06 – 3வது ஒருநாள் (விசாகப்பட்டினம்)

டி20:

டிச 09 – 1வது T20 (கட்டாக்)

டிச 11 – 2வது T20 (முல்லன்பூர்)

டிச 14 – 3வது T20 (தர்மசாலா)

டிச 17 – 4வது T20 (லக்னோ)

டிச 19 – 5வது T20 (அகமதாபாத்)

இந்த அட்டவணையின்படி, இந்திய கிரிக்கெட் அணி பதிவு செய்யப்பட்ட  போட்டிகளுடன் 2025 ஆம் ஆண்டை முழுமையாக பரபரப்புடன் கழிக்கவுள்ளது. ரசிகர்கள் இதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.