உத்தரப் பிரதேசத்தின் கிராமப்புறப் பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் தனது கணவரிடமிருந்து தப்பிக்க அலறியபடி ஓடுவதையும், பின்னால் அவரது கணவர் கையில் தடியுடன் துரத்தி வருவதையும் காண முடிகிறது.

கணவரின் தாக்குதலுக்குப் பயந்து அந்தப் பெண் அங்கிருந்த ஒரு கிணற்றில் திடீரென குதிக்க, அவரைத் தொடர்ந்து துரத்தி வந்த கணவரும் அதே கிணற்றில் குதிப்பது பார்ப்பவர்களை உறைய வைக்கிறது. இது ஏதோ திரைப்படக் காட்சி போலத் தோன்றினாலும், நிஜத்தில் நடந்த ஒரு சம்பவமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமானத் தகவல்கள் வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பார்த்த பலரும், இது ஒரு குடும்ப வன்முறையின் கொடூரமான முகம் என்று தங்களது வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

“>

 

அதே சமயம், இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட நாடகமா அல்லது உண்மையானச் சம்பவமா என்ற விவாதமும் எழுந்துள்ளது. எது எப்படியோ, இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூகத்தில் நிலவும் குடும்ப வன்முறைகள் குறித்தக் கேள்வியையும் மீண்டும் எழுப்பியுள்ளது.