கேரள மாநிலத்தை சேர்ந்த 22 வயது மாணவி தர்ஷனா, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அங்கிருந்த ஒரு தனியார் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், நேற்று அவரது தோழிகள் செல்போனில் அழைத்தும் அவர் பதிலளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த தோழிகள் அறைக்குச் சென்று பார்த்தபோது, தர்ஷனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த போலீசார் தர்ஷனாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தர்ஷனாவின் தற்கொலைக்கு படிப்பு தொடர்பான அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பல்கலைக்கழக துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார். மாணவியின் இந்த விபரீத முடிவு சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.