“எல்லா ஹீரோக்களும் Capes அணிந்து வருவதில்லை, சிலர் மற்றவர்களின் உயிரைக் காக்க பிரதிபலிக்கும் பட்டைகளை (Reflector Bands) அணிவிக்கிறார்கள்” என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட ஒரு வீடியோ இப்போது இணையத்தில் இதயங்களை வென்று வருகிறது. அந்த வீடியோவில், ஒரு காவலர் நள்ளிரவில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளின் கழுத்தில் சிவப்பு நிற ‘ரெஃப்லெக்டர் பேண்ட்’களை (Reflector Bands) கவனமாக அணிவிக்கிறார். இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாதபோது, சாலையில் நிற்கும் மாடுகள் வாகன ஓட்டிகளுக்குத் தெரிவதில்லை. இதனால் ஏற்படும் பயங்கர விபத்துகளைத் தடுக்கவே இந்தக் காவலர் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
Not all heroes wear capes some tie reflector bands to protect cows at night!❤️ pic.twitter.com/7Hrox6WPH9
— 𝑺𝒂𝒏𝒅𝒉𝒚𝒂𝒂'𝒗 (@vedicvenus_) January 9, 2026
இந்த ரெஃப்லெக்டர் பேண்ட்கள் வாகனங்களின் முகப்பு விளக்கு படும்போது பிரகாசமாக மின்னும். இதனால் ஓட்டுநர்கள் தூரத்திலிருந்தே மாடுகள் இருப்பதை உணர்ந்து வாகனத்தின் வேகத்தைக் குறைக்க முடியும். வாயில்லா ஜீவன்களின் உயிரையும், மனிதர்களின் பாதுகாப்பையும் ஒரே நேரத்தில் உறுதி செய்யும் இந்தக் காவலரின் மனிதாபிமானச் செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். “சத்தமில்லாமல் ஒரு பெரும் மாற்றத்தைச் செய்யும் இவரே உண்மையான ஹீரோ” என்று சமூக வலைதளங்களில் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
