சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, மனித நேயத்தின் மீதும் பாசத்தின் மீதும் நமக்கு இருக்கும் நம்பிக்கையை மீண்டும் துளிர்விடச் செய்துள்ளது. அந்தக் காணொளியில், ஒரு முதியவர் தனது வயதான தாய்க்கு உணவு ஊட்ட பெரும் முயற்சி எடுக்கிறார். அந்தத் தாய் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதால், தன்னைச் சுற்றி நடப்பதை உணராமல் உணவை உண்ண மறுப்பதோடு, தன் மகனைத் தொடர்ந்து கைகளால் அடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அந்த மகன் தாயின் அடிகளால் சற்றும் மனம் தளரவில்லை.
தன் தாயை குழந்தையை போல் கவனிக்கும் மகன்🙏🙏 pic.twitter.com/BgCnJ0aVRT
— Rajini (@rajini198080) January 9, 2026
தன்னை அடிக்கும் தாயின் கைகளை அன்போடு வருடிவிட்டு, ஒரு குழந்தையைச் சமாதானப்படுத்துவது போல மீண்டும் மீண்டும் அவருக்கு உணவு ஊட்ட முயற்சிக்கிறார். “தாய் எங்களை வளர்க்கும்போது எத்தனை கஷ்டங்களைச் சுமந்திருப்பாரோ, அதைவிடக் குறைவாகவே நான் இப்போது செய்கிறேன்” என்பதை அந்த மகனின் பொறுமை உணர்த்துகிறது. எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காத இந்தத் தூய்மையான அன்பைக் கண்டு நெட்டிசன்கள் கண்ணீர் மல்கக் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “பெற்றவளைக் கைவிடும் பிள்ளைகளுக்கு மத்தியில், இந்த மகன் ஒரு வாழும் தெய்வம்” என்று பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.
