தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு தவெக தரப்பிலிருந்து முதல்முறையாக மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. நயினாரின் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் சூழலில், இன்று (பிப். 14) ஈரோட்டில் தவெக நிர்வாகி செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது நயினார் நாகேந்திரனின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மிகவும் அலட்சியமாகவும், காரசாரமாகவும் பதிலளித்த செங்கோட்டையன், “அதெல்லாம் ஒரு கட்சியா? அவரெல்லாம் ஒரு ஆளா? அவர் சொல்வதற்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை” என நயினார் நாகேந்திரனையும் பாஜகவையும் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் விமர்சித்துப் பேசினார். “தளபதி ஒரு சிகரம், அவரைச் சீண்டுவதன் மூலம் நயினார் நாகேந்திரன் விளம்பரம் தேடிக்கொள்கிறார்” என்றும் அவர் சாடியுள்ளார். இந்த அதிரடிப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
