சென்னையில் நீதிமன்ற அறையின் உள்ளே குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டு, பின்னணி இசையுடன் வீடியோ பதிவு செய்து அதை இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ்’ ஆக வெளியிட்ட பரத் (24) என்ற இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கு விசாரணைக்காக ஆஜரான பரத், தடை செய்யப்பட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் தனது நண்பரை வைத்து இந்த வீடியோவைப் பதிவு செய்து, பின்னர் எடிட் செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட பரத் மற்றும் வீடியோ எடுக்க உதவிய 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பரத் மீது ஏற்கனவே வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.