SIR பணிகளை அவசர கதியில் மேற்கொள்வது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். முறையாகச் சீர்திருத்தம் செய்ய நினைத்திருந்தால், குறைந்தபட்சம் ஓராண்டாவது அவகாசம் எடுத்து இப்பணிகளைச் செய்திருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தங்களுக்குச் சாதகமான வாக்காளர்களை ஆட்சியாளர்கள் தேர்வு செய்வதே SIR என்பதன் நோக்கம் என்றும் அவர் சாடியுள்ளார். ஒரே மாதத்தில் சுமார் 6 கோடி வாக்காளர்களை எப்படிச் சரிபார்க்க முடியும் என்றும் அவர் வினவியுள்ளார்.
இவ்வளவு குறைந்த காலத்தில் இந்தப் பெரும் பணியைச் செய்து முடிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்றும், இதில் பல்வேறு குளறுபடிகள் இருக்க வாய்ப்புள்ளது என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த SIR பணிகளை நிறுத்திவைத்து, ஒரு நிபுணர் குழுவின் மேற்பார்வையில் கால அவகாசம் எடுத்து, வெளிப்படையான முறையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
