சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சுக்மேனியா பாய் (55) என்ற பழங்குடியின பெண், தனது 90 வயது மாமியாரைத் தனது முதுகில் சுமந்து கொண்டு சுமார் 9 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வங்கிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரைக் கலங்கடிப்பதோடு, இணையவாசிகளிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காடுகளும் ஓடைகளும் நிறைந்த அந்த மலைப்பகுதியில் எவ்வித போக்குவரத்து வசதியும் இல்லாததாலும், மாதந்தோறும் வழங்கப்படும் 500 ரூபாய் முதியோர் ஓய்வூதியத்தைப் பெறப் பயனாளிகள் நேரில் வர வேண்டும் என வங்கி நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாலும் இப்பெண் இந்தச் சிரமமான முடிவை எடுத்துள்ளார்.
கைரேகை பதிவு மற்றும் அடையாளச் சரிபார்ப்புக்காகப் பென்ஷன் வாங்குபவர் நேரில் வர வேண்டும் என்ற வங்கியின் கடுமையான விதிகளால், கடந்த சில மாதங்களாகவே இப்பெண் தனது மாமியாரைச் சுமந்து கொண்டு இந்த கரடுமுரடான காட்டுப்பாதையில் நடந்து வந்துள்ளார்.
முன்பு இந்தத் தொகை கிராமங்களிலேயே நேரடியாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய புதிய முறையால் தங்களைப் போன்ற எளிய குடும்பங்கள் பெரும் அவதிக்குள்ளாவதாக அந்தப் பெண் வேதனை தெரிவித்துள்ளார்.
A tribal woman from Chhattisgarh’s Surguja carried her 90 year old mother-in-law on her shoulders and walked 5 km in the scorching heat to avail her pension money. pic.twitter.com/5s69FbMEgt
— खुरपेंची ढांचे (@Khurpenchinfra) May 23, 2026
“>
இந்தியாவின் கிராமப்புறங்களில் அரசு நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையும் நடைமுறையில் இருக்கும் குறைபாடுகளை இந்தச் சம்பவம் மீண்டும் வெளிச்சத்திற்குற்குக் கொண்டு வந்துள்ளது.
