தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் இணைந்தது தொடர்பாக திமுக ஆ.ராசா வெளியிட்ட பதிவுக்குக் கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில், “அரசியல் ரீதியாக எங்களை அதிகமாக விவாதித்தால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய அரசியல் சூழலில் மகாத்மா காந்தியைப் போல எங்களால் அமைதியாகப் பொறுமை காக்க முடியாது என்றும், எதிர்த்தரப்பினர் தங்களிடம் எந்தப் பாணியில் பேசுகிறார்களோ, அதே பாணியில் நாங்களும் அவர்களுக்குப் பதிலளிக்கத் தயாராக இருக்கிறோம் என்றும் எச்சரித்தார்.

மேலும், ஆ.ராசா தனது கொள்கை நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக உள்ளார் என்று அவருக்கு ஆதரவு தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, கூட்டணிக் கட்சிகளின் விமர்சனங்களுக்குத் திமுகவும் ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுக்கும் என்பதைத் திட்டவட்டமாக உணர்த்தியுள்ளார்.

ஆர்.எஸ்.பாரதியின் இந்த  பேச்சு, முதல்வர் ஸ்டாலின் அமைதி காக்குமாறு அறிவுறுத்திய சில மணி நேரங்களிலேயே வெளிவந்துள்ளதால், திமுக கூட்டணிக்குள்ளான மோதல் மேலும் தீவிரமடைந்துத் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“>