தமிழக அரசின் பல்வேறு முக்கியத் துறைகளில் கடந்த சில தினங்களாக வெளியிடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் (Short Notice Tenders) திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஊரக வளர்ச்சித் துறை, போக்குவரத்துத் துறை, பொதுப்பணித் துறை, மின்சாரத்துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில், கடந்த மே 13-ஆம் தேதி முதல் இன்று (மே 22) வரை அவசரத் தேவைகளுக்காக இந்த டெண்டர்கள் கோரப்பட்டிருந்தன.
விதிகளின்படி உரிய அவகாசம் வழங்காமல் குறுகிய கால டெண்டர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று அரசுத் தரப்பில் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிர்வாகக் காரணங்களுக்காகவே இந்த நூற்றுக்கும் மேற்பட்ட டெண்டர்கள் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்படுவதாகத் துறைச் செயலாளர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
