பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் அமைந்துள்ள பெண்கள் சிறையில், கைதிகளுக்கிடையே வருடாந்திர அழகிப் போட்டி ஒன்று நடைபெற்றது. சிறைக்கைதிகளின் தன்னம்பிக்கையை உயர்த்தவும், சமூக இணைப்பை உறுதிப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த விழாவில், சிறந்த நன்னடத்தை காட்சிப்படுத்திய 10 பெண் கைதிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு போட்டிக்கான தனிப்பட்ட பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

விழா நாளன்று, கைதிகள் வழக்கமான சிறை ஆடைகளை விடுத்து, சிறப்பு அலங்கார ஆடைகளை அணிந்து, ஒப்பனைகளுடன் மேடையில் மாடல்களைப் போல் அணிவகுத்தனர். பங்கேற்பாளர்களின் உடை, நடையும், அவர்களின் சர்வதேச மாடலிங் போக்கையும் போல காட்சியளித்தது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நடுவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், ஜாய் சோரஸ் என்ற கைதி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மகுடம் அணிவித்து, நடுவர்களால் பாராட்டப்பட்டது. விழாவின் போது, சக கைதிகளும், பார்வையாளர்களும் உற்சாகமாக கரவொலி எழுப்பி, ஜெயித்த பெண்ணை வாழ்த்தினர். மேலும் இந்த அழகிப் போட்டி, கைதிகளுக்கு சமூக ஒத்துழைப்பு மற்றும் குடும்ப உறவுகளுடன் நேரத்தை கழிக்கும் அரிய வாய்ப்பை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.