அர்ஜென்டினாவின் புவனெஸ் அயர்ஸ் நகருக்கு அருகே ஒரு பயங்கர சம்பவம் நடந்தது. 20 வயதான பிரெண்டா, மோரேனா மற்றும் 15 வயதான லாரா மூன்று இளம்பெண்கள், விருந்துக்கு அழைப்பு என்று கூறி ஒரு கும்பலால் வேனில் கடத்தப்பட்டனர். இவர்களை புளோரன்சியோ வரேலா பகுதியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்ற அந்த கும்பல், பெரு நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் என்று கூறப்படுகிறது.
அங்கு, இந்தப் பெண்கள் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். கும்பலின் தலைவன், தனது இன்ஸ்டாகிராமில் இந்தக் கொடூரத்தை நேரலையாக ஒளிபரப்பினான். இது ஒரு தனிப்பட்ட குழுவுக்கு மட்டுமே காட்டப்பட்டதாக காவல்துறை கூறுகிறது. மெட்டா நிறுவனம், இது தங்கள் தளத்தில் நடக்கவில்லை என்று மறுத்துள்ளது. ஐந்து நாட்களுக்குப் பிறகு, பெண்களின் உடல்கள் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த சம்பவம் அர்ஜென்டினாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறை ஐந்து பேரை கைது செய்து, முக்கிய குற்றவாளியைத் தேடி வருகிறது.
