கர்நாடக மாநிலம் மைசூருவில் டி.ஆர்.டி.ஓ.வில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்த ஆதித்ய வர்மா (28) திருமணமான இரண்டு நாள்களிலேயே மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அல்வாரை சேர்ந்த ஆதித்ய வர்மா, நவ்யா என்ற இளம்பெண்ணை கடந்த 25ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு 27ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் வீட்டில் உள்ள பாத்ரூமுக்குச் சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் குடும்பத்தினர் அச்சமடைந்தனர்.
பாத்த்ரூம் கதவை உடைத்து உள்ளே நுழைந்த அவர்கள், ஆதித்ய வர்மா மயக்க நிலையில் கிடப்பதை கண்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்பக்கட்ட தகவலின்படி, மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த திடீர் மரணம் குடும்பத்தினரும் உறவினர்களும்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
