கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டம் குஷ்டகியைச் சேர்ந்த எச்.ஓ. துரை (75), கர்நாடக போலீஸில் துணை காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

நேற்று காலை, துரை தனது இல்லத்திலேயே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதுகுறித்த தகவலினைப் பெற்ற குஷ்டகி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, துரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், அவர் தற்கொலைக்கு காரணமான சூழல்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

துரையின் மனைவி சில ஆண்டுகள் முன்பு விபத்தில் உயிரிழந்த நிலையில், அவர் தனது மகனுடன் குஷ்டகியில் வசித்து வந்தார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக துரை சில காலமாக அவதியுற்றுவந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிகிறது.