மத்திய அரசு ஊழியர்களுக்கான அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகல விலைப்படி உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

அதன்படி தற்போது டெல்லியில் பணியாற்றும் அரசிதழ் அல்லாத குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவு பணியாளர்களுக்கான தீபாவளி போனஸ் தொகை 56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த பிரிவு பணியாளர்களுக்கு 7000 ரூபாய் தீபாவளி போனஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.