இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஹரியானா மாநிலத்தில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பணம் இல்லாமல் மருத்துவ வசதியை அரசு அறிமுகம் செய்தது. இதன் சோதனை ஓட்டமாக நவம்பர் 1ஆம் தேதி மீன்வளம் மற்றும் தோட்டக்கலைத் துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு இலவச மருத்துவ வசதி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இந்தத் திட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்களின் மருத்துவ செலவு மற்றும் குடும்பத்தினரின் மருத்துவ செலவை அரசு ஏற்றுக்கொள்ளும். அது மட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள் குடும்ப ஐடி எண் அல்லது ஆதார் எண் மூலம் இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.