இந்தியாவில் பாக்கெட் செய்யப்பட்டு உணவுப் பொருட்கள் மற்றும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களுக்கும் விற்பனை விலைகள் பதிவு செய்வது குறித்து புதிய விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அதாவது ஜனவரி 1ஆம் தேதி முதல் நாட்டில் புதிதான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஒரு கிலோவுக்கு மேல் பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் விற்கப்படும் சில்லறை விலையுடன் ஒரு கிலோவுக்கு யூனிட் விற்பனை விலை என்று குறிப்பிட வேண்டும்.

ஐந்து கிலோ பாக்கெட் உள்ள பொருள்களுக்கு ஒரு கிலோ விற்பனை விலை எனவும் ஒரு கிலோவுக்கும் குறைவான பொருட்களுக்கு ஒரு கிராம் அல்லது ஒரு லிட்டர் அல்லது ஒரு சென்டிமீட்டர் என குறிப்பிட்ட விலையையும் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைப் போலவே பேனா மற்றும் பென்சில் போன்ற எண்ணிக்கை கொண்ட விற்பனை பொருள்களுக்கு ஒன்றின் விலையை அட்டைகளின் மீது நிறுவனங்கள் குறிக்க வேண்டும். இந்த உத்தரவுகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.