பீகார் மாநிலத்தில் 12,761 தனியார் பயிற்சி மையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மையங்களில் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாநிலத்தின் பள்ளி தேர்வு வாரிய நடைமுறை மற்றும் கோட்பாடு தேர்வுகள் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடங்கப்பட உள்ளது.

எனவே தங்களுடைய பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு வருவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் மாநிலத்தின் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளையும் தனியார் நிறுவனங்களில் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் விவரங்களை தலைமையகத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தகவலின் படி ஆசிரியர்கள் தனியார் பயிற்சி நிறுவனங்களில் வகுப்புகள் எடுப்பதை கண்டறிந்தால் அவர்கள் மீது துறை ரீதியான சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் . தவறு செய்யும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அதனைப் போலவே அரசு பள்ளி ஆசிரியர்கள் யாரும் தங்கள் நிறுவனங்களில் வகுப்பு எடுக்க மாட்டார்கள் என்றும் தனியார் பயிற்சி மையங்களில் இருந்து எழுத்துப்பூர்வமாக மாவட்ட ஆட்சியருக்கு உறுதிமொழி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.