அனைத்து மாநிலங்களில் இருந்தும் அயோத்திக்கு 500 ரயில்களின் சேவை தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் செல்ல வசதியாக ரயில் போக்குவரத்தை இணைப்பு வசதியை மேம்படுத்துவதற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. சிறிய ரயில் நிலையமாக இருந்த அயோத்தி தாம் ரயில் நிலையம் முதல் கட்டமாக 240 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் நிலையத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதனைப் போலவே புதிய விமான நிலையமும் அங்கு திறக்கப்பட உள்ளது. பல்வேறு முக்கிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் அதிக அளவில் மக்கள் செல்ல ரயில் போக்குவரத்து உள்ளது. நாடு முழுவதும் இருக்கும் 16 ரயில்வே மண்டலங்கள் சார்பாக அனைத்து மாநிலங்களில் இருந்தும் அயோத்தியை இணைக்கும் வகையில் 500க்கும் மேற்பட்ட ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.