தமிழகத்தின் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் தங்களின் குடும்ப பொருளாதார நிலை காரணமாக உயர்கல்வியை தொடர முடியாமல் போகின்றனர். அதனால் அவர்களுக்கு உதவும் விதமாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பலன்களை பெறுவதற்கு மாணவிகள் ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்திருக்க வேண்டும்.

அதனைப் போலவே இலவச கட்டாய கல்வி திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் மற்றும் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த அரசு பள்ளி மாணவிகள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். கலை அறிவியல், தொழில்முறை படிப்புகள், டிப்ளமோ, துணை மருத்துவம், ஐடிஐ, இளநிலை மற்றும் முதுநிலை ஆகிய படிப்புகளில் மாணவிகள் சேர்ந்தால் மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

மேலும் இந்த உதவி தொகை கலை அறிவியல் என்றால் 3 வருடங்கள் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு நான்கு வருடங்கள் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு 5 வருடங்கள் என அவர்கள் தேர்வு செய்யும் படிப்பிற்கு ஏற்றது போல வழங்கப்படும் எனவும் ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அரசு பள்ளியில் பயின்ற கல்லூரிக்கு சென்றால் அனைவருக்குமே உதவித்தொகை கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் வேறு திட்டத்தில் உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கும் இந்த உதவி தொகை கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பட விருப்பம் உள்ள மாணவிகள் கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர் மூலமாக என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.