பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.35 மணிக்கு செல்லும் திருவள்ளூர் மின்சார ரயில், காலை 10 மணிக்கு செல்லும் திருத்தணி மின்சார ரயில், காலை 10.30 மணிக்கு புறப்படும் கடம்பத்தூர் மின்சார ரயில் மற்றும் காலை 11 மணிக்கு செல்லும் அரக்கோணம் மின்சார ரயில் ஆகியவை இன்று பட்டாபிராமம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு மற்றும் செவ்வாப்பேட்டை ரோடு ஆகிய நிறுத்தங்களில் எடுக்காமல் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் காலை 9.05 மணிக்கு வேளச்சேரியில் இருந்தும், காலை 9.55 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்தும் திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில்கள் இன்று பட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு மற்றும் செவ்வாப்பேட்டை ரோடு ஆகிய நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.