பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதாகக் கூறிக்கொண்டு, நடிகை நயன்தாரா குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய கருத்துக்கள் இப்போது பெரும் புயலை கிளப்பியுள்ளன. இது குறித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள பாஜக பிரமுகர் குஷ்பு, சி.வி.சண்முகத்தின் இந்தப் பேச்சு ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே வெட்கக்கேடானது என்று விளாசியுள்ளார்.
ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் நபர், பொது மேடையில் இப்படி தரம் தாழ்ந்து பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், பெண்களை இழிவுபடுத்தும் இத்தகைய போக்கு கண்டிக்கத்தக்கது என்றும், இது போன்ற பேச்சுகள் அரசியலில் கண்ணியத்தைக் குறைப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
