தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் கேவிஎன் நிறுவனம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாவதாக இருந்த நிலையில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தேதி தள்ளி போனது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் படக்குழு வழக்கு தொடர்ந்த நிலையில் முதலில் விசாரித்த தனி நீதிபதி உடனடியாக யுஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நிலையில் மேல்முறையீட்டு வழக்கில் தலைமை நீதிபதி அதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதோடு ஜனவரி 21ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார். அதே நேரத்தில் சென்சார் போர்டுக்கு நேரம் கொடுக்க வேண்டும் எனவும் பட குழு நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளது எனவும் ஜனநாயகன் பட குழுவுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் பாஜக மீது அரசியல் கட்சித் தலைவர்கள் பரும் குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது நடிகர் கருணாஸ் இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது நடிகர் விஜயின் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் போனது துரதிஷ்டவசமான விஷயம். ஏதோ ஒரு அரசியல் சூழ்ச்சிக்காக நடிகர் விஜய்யை அடிபணிய வைக்கவும் நிர்பந்தத்தை ஏற்படுத்தவும் தணிக்கை வாரியத்தை மத்திய அரசு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது என்ற சந்தேகம் எழுகிறது.

இந்த பிரச்சனையில் விஜய்க்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் என்றும் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார். மேலும் மத்திய பாஜக அரசு நடிகர் விஜயை தங்கள் பக்கம் இருப்பதற்காகவே இவ்வாறு குறைச்சல் கொடுப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் விமர்சிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.