நடிகை த்ரிஷா மற்றும் தவெக தலைவர் விஜய் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அண்ணாமலை தற்போது தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். “அரசியல் என்று வந்துவிட்டாலே குடும்ப உறுப்பினர்களை இழுத்துப் பேசி முட்டுச்சந்தில் நிற்க வைக்கும் நிலை தான் தற்போது உள்ளது” என்று அவர் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார். நயினாரின் பேச்சு சர்ச்சையானதை அடுத்து, அண்ணாமலையின் இந்த விளக்கம் அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.
மேலும், விஜய் குறித்துப் பேசிய அண்ணாமலை, “விஜய் இத்தகைய சூழ்நிலைகளைச் சமாளித்து மேலும் பக்குவமாகச் செயல்பட வேண்டும். அரசியலில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் மிகவும் அவசியம்” என்று ஒரு மூத்த அரசியல்வாதியைப் போல அட்வைஸ் கொடுத்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்கும், அவர் சந்திக்கும் விமர்சனங்களுக்கும் அண்ணாமலை அளித்துள்ள இந்தப் பதில், தவெக மற்றும் பாஜக தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
