நடப்பு 2026-ம் ஆண்டு ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்குத் தேவையான பச்சரிசியை வழங்குவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நாட்கள் முழுவதும் கஞ்சி தயாரிக்கத் தடையின்றி அரிசி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

​கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, மொத்தம் 8,700 டன் பச்சரிசி மொத்த அனுமதியின் (Bulk Permission) கீழ் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் நோன்பு காலங்களில் இஸ்லாமிய மக்களுக்கு எந்தச் சிரமமும் இருக்கக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.