தமிழகத்தில் 2026 தேர்தலுக்கு தற்போது அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அந்த வகையில் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்கும் நிலையில் நேற்று பாமக கட்சியின் தலைவர் அன்புமணியும் அதிமுகவுடன் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட 16 கட்சிகள் இருக்கிறது. இதற்கிடையில் தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் களத்தில் இருப்பதால் இந்த முறை நான்கு முறை போட்டிகள் நிலவும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில் அவரிடம் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் கூட்டணியில் இணைவார்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு ஓபிஎஸ்-ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை என பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்தார். அதே நேரத்தில் டிடிவி தினகரன் கூட்டணியில் இணைவாரா  என்ற கேள்விக்கு அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை.

ரகசியமாக இருந்தால் தான் அரசியல் கட்சிக்கு அந்தஸ்து  என அவர் சூசகமாக தெரிவித்தார். இதனால் டிடிவி தினகரனுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என கூறப்படுகிறது. மேலும் அதே நேரத்தில் டிடிவி தினகரன் அதிமுக மற்றும் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என கூறிவரும் நிலையில் அவர் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.