டெல்லியில் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி புகட்டும் ‘தான்சிங் கி பாடஷாலா’ என்ற பள்ளியைச் சேர்ந்த மாணவி ஒருவர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற செய்தி சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன் அந்த மாணவி தனது தாய்க்கு போன் செய்து, “அம்மா, நான் பாஸ் ஆகிட்டேன்” என்று மகிழ்ச்சியில் அழுதபடி சொல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

டெல்லி போலீஸில் தலைமைக் காவலராக பணியாற்றும் தான்சிங் என்பவர் நடத்தும் இந்தப் பள்ளியில் பயின்று, பல கஷ்டங்களுக்கு இடையிலும் அந்த மாணவி சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது வெற்றியைக் கேட்டதும் அந்த மாணவி ஓடிச் சென்று தனது ஆசிரியர் தான்சிங்கை ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்த தருணம் பார்ப்பவர்கள் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

இந்தப் பாடசாலையின் ஆரம்பகால மாணவியான இவர், விடாமுயற்சியுடன் படித்துப் பெற்ற இந்த வெற்றி அவரது எதிர்காலத்திற்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Than Singh (@thansinghkipathshala)

“>

இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், “கல்விதான் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் மிகப்பெரிய ஆயுதம்” என்று அந்த மாணவியின் உழைப்பையும், அவருக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியரையும் பாராட்டி வருகின்றனர்.